சில்லி ஃபிஷ்

seelamenn

 

 

தேவையான பொருட்கள்  :

 

வஞ்சரம் மீன்          – ½ கிலோ

எண்ணெய்              – ¼ கப்

தயிர்                   – ½ கப்

சிவப்பு கலர்            – 1 சிட்டிகை

பச்சைமிளகாய்                 – 5 (நறுக்கியது)

சோய் சாஸ்            – ½ மேசைக்கரண்டி

கரம் மசாலா           – 1 மேசைக்கரண்டி

மிளகாய் பொடி                 – 1 மேசைக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி

சில்லி சாஸ்            – 1 மேசைக்கரண்டி

எழுமிச்சை சாறு        – 1 மேசைக்கரண்டி

உப்பு                   – 1 மேசைக்கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் வஞ்சரம் மீனை நன்றாக சுத்தம் செய்யவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தயிர், கரம் மசாலா, மிளகாய் பொடி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சைமிளகாய், சில்லி சாஸ், எழுமிச்சை சாறு, சிவப்பு கலர் மற்றும் சிறிதளவு உப்பை போட்டு நன்றாக கலந்துக் கொள்ளவும்.

 

  1. கலவையில் எல்லா மீனையும் முக்கி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். இதை 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தோச தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு ஒரு மீனாக போடவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்து பொன்னிறமாகும் வரை வேக விடவும். சுவையான சில்லி ஃபிஷ் சாப்பிட தயார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.