அகத்திக் கீரையின் மருத்துவ குணங்கள்.

agathi keerai

அகத்திக் கீரையின் பூ மற்றும் பிஞ்சு ஆகியவற்றை சமைத்து சாப்பிடுகின்றனர்.  இலை, பூ, வேர், பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவ உபயோகமுள்ளவையாக இருக்கின்றன.  அகத்திக் கீரை உஷ்ணம் அகற்றியாகவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.  அகத்தி வேர் உடலுக்கு பலம் தரும் மருந்தாகவும் உபயோகப்படுகிறது.

கீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட வெயிலில் அலைவதால் ஏற்படும் உஷ்ணம் மற்றும் மலச்சிக்கல் தீரும்.  காபி,டீ குடிப்பதால் ஏற்படும் பித்தத்தையும் நீக்கும்.

அகத்தி வேர்ப்பட்டையையும், மரப்பட்டையையும் குடிநீராக்கி சாப்பிட்டு வர, சுரம், தாகம், கைகால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால், உளளங்கை எரிச்சல், நீர்க் கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச் சுரம் ஆகியவை தீரும்.

இலைச்சாறு 1 லிட்டர் மற்றும் நல்லெண்ணெய் 1 லிட்டரும் சேர்த்து கலக்க வேண்டும்.  பதமாக காய்ச்சி வடிக்க வேண்டும்.  வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலின் கிழங்கு, விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டினால் வருவது அகத்தித் தைலம்.

அகத்தித் தைலம் வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி அகலும்.  கண்கள் குளிர்ச்சி பெறும்.

Leave a Reply

Your email address will not be published.