சில்லி ஃப்ரைட் பொட்டெட்டோ

சில்லி ஃப்ரைட் பொட்டெட்டோ

 

 

தேவையான பொருட்கள் :

 

மைதா                 – 1 கரண்டி

கார்ன்ப்ளார்            – 1 கரண்டி

ரெட் சில்லி பேஸ்ட்    – 1 கரண்டி

சோயா சாஸ்           – 1 கரண்டி

இஞ்சி                  – 1 கரண்டி

பூண்டு                  – 1 கரண்டி

வெள்ளை மிளகு       – 1 கரண்டி

உருளைக்கிழங்கு       – 2

முட்டை                – 1

பச்சை மிளகாய்        – 4

பெரிய வெங்காயம்     – 1

குடைமிளகாய்         – 1

ஸ்ப்ரிங் ஆனியன்      – சிறிதளவு

எண்ணெய்              – தேவையான அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. காய்கறிகளை நன்றாக கழுவி வைக்கவும். உருளைக்கிழங்கை சிறு சிறு சீவல்களாக அரியவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வெங்காயம் பொன்நிறமாகும் வரை வதக்கவும். நன்றாக வெந்ததும் குடைமிளகாய், வெள்ளை மிளகு, உப்பு, ரெட் சில்லி பேஸ்ட், சோயா சாஸ், 2 கரண்டி தண்ணீர் ஊற்றி கிளறவும்.

 

  1. உருளக்கிழங்குடன் மைதா, கார்ன்ப்ளார் மாவு, சிறிதளவு உப்பு மற்றும் முட்டை சேர்த்து நன்றாக பிசறவும். வேறு ஒருகடாயில் எண்ணெய் ஊற்றி பிசரிய உருளைக்கிழங்கை பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

 

  1. மசாலா நன்றாக வெந்ததும் அதில் பொறித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து கிளறவும். சில்லி ஃப்ரைட் பொட்டெட்டோ சாப்பிட தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.