சீலாமீன் கான்டினென்டல் ப்ரை

seelamenn

 

 

தேவையான பொருட்கள்  :

 

சீலாமீன்                – 5 துண்டு

எலுமிச்சை சாறு        – 3

மிளகு                  – 1 ½ தேக்கரண்டி

இஞ்சி                  – 2 அங்குலம்

பூண்டு                  – 6 பல்

ரஸ்க் தூள்             – 1 கப்

முட்டையின்           – 3 (வெள்ளைக் கரு)

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் சீலாமீனை நன்றாக சுத்தம் செய்யவும். சுத்தப்படுத்திய சீலாமீன் துண்டுகளை எலுமிச்சை சாறில் நனைத்து எடுக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு, மிளகு இவற்றை அம்மியில் நன்கு அரைத்து சாறு எடுக்கவும். சாறில் உப்பு போட்டு மீனுடன் சேர்க்கவும்.

 

  1. பிறகு மீனில் முட்டையின் வெள்ளைக்கருவை சிறிது தடவி பின் மீனின் மீது ரஸ்க் தூள் அல்லது ரவையை தூவ வேண்டும். கடைசியாக மீனை சூடான எண்ணையில் பொறித்து எடுக்கவும். சுவையான சீலாமீன் கான்டினென்டல் ப்ரை தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.