சைனீஸ் சிக்கன் ப்ரைய்

chinese chicken

 

தேவையான பொருட்கள் :

 

கோழி                  – 2 கிலோ

பெரிய வெங்காயம்     – 2

சோயா சாஸ்           – 1 கப்

வினிகர்                – ½ கப்

அஜினோமோட்டோ    – ¼ தேக்கரண்டி

நல்லெண்ணைய்        – 2 தேக்கரண்டி

மைதா                 – 2 மேசைக்கரண்டி

மிளகுத்தூள்            – 2 தேக்கரண்டி

கார்ன் ப்ளார்           – 3 மேசைக்கரண்டி

டால்டா(பொறிப்பதற்க்கு)        – தேவையான அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் கோழியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு வெங்காயத்தை தோலுரித்து நறுக்கி தண்ணீரில்லாமல் மிக்ஸியில் அரைக்கவும்.

 

  1. கோழியுடன் அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், சோயா சாஸ், அஜினோமோட்டோ, உப்பு, மஞ்சள் சேர்த்து ½ மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய கோழியை குக்கரில் போட்டு அரைவேக்காடு வெந்ததும் எடுக்கவும்.

 

  1. பிறகு கார்ன் ப்ளார், மைதாவை சேர்த்து சலித்த பின் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக கரைக்கவும். வாணலியில் டால்டாவை போட்டு உருகி நன்றாக காய்ந்ததும், அரைவேக்காடு வெந்த கோழி துண்டுகளை கரைத்து வைத்த மாவில் நனைத்து டால்டாவில் பொன்னிறமாக பொறித்தெடுக்கவும். சுவையான சைனீஸ் சிக்கன் ப்ரைய் தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.