சைனீஸ் இறால் வறுவல்

சைனீஸ் இறால் வறுவல்

 

 

தேவையான பொருட்கள்  :

 

இறால்                         – 15

சோளமாவு             – 2 மேசைக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

நல்லமிளகுத்தூள்       – ¾ தேக்கரண்டி

மிளகாய்த்தூள்         – ¾ தேக்கரண்டி

வெங்காயத்தலை       – ½ கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)

வினிகர்                – ½ தேக்கரண்டி

சோயாசாஸ்            – ¾ தேக்கரண்டி

எண்ணெய்              – தேவையான அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை :

 

  1. முதலில் இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு உலரவைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய்தூள், நல்ல மிளகுத்தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, வினிகர், சோயாசாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசரி கலந்து வைக்கவும்.

 

  1. இறாலை கலந்த மசாலா கலவையில் போட்டு நன்றாக பிசறி 1 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு ஒரு கடாயில் பொறிக்கும் அளவிற்க்கு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் இறாலை இரண்டு, மூன்றாகப் போட்டு பொறித்தெடுக்கவும். சைனீஸ் இறால் வறுவல் சாப்பிட தயார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.