தந்தூரி சிக்கன்

தந்தூரி சிக்கன்

 

 

தேவையான பொருட்கள்  :

 

கோழி தொடை                 – 4

எண்ணெய்                      – ½ லிட்டர்

ஜிலேபி பவுடர்                         – சிறிதளவு

இஞ்சி, பூண்டு விழுது          – 2 கரண்டி

கடலை மாவு                   – 50 கிராம்

மைதா மாவு                   – 50 கிராம்

சில்லி சிக்கன் பவுடர்           – 50 கிராம்

முட்டை வெள்ளை கரு                 – 1

எலுமிச்சை பழம்               – 1

உப்பு                           – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. சிக்கனை சுத்தம் செய்யவும். நன்றாக சுத்தம் செய்த சிக்கனை சிறிது சிறிதாக கீறல் போட்டு வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, சில்லி சிக்கன் பவுடர், இஞ்சி, பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

 

  1. இத்துடன் கலவையில் எலுமிச்சை சாறை பிழிந்து அத்துடன் கலருக்காக சிறிது ஜிலேபி பவுடரையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக பிசையவும். இந்த மசாலா கலவையில் கோழிக்கறியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

 

  1. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், நன்றாக கொதிக்கும் போது மசாலா பிரட்டிய கறியை அதில் போட்டு நன்றாக வேக விடவும். கறி வேகும் போது நன்றாக எல்லா பக்கமும் திருப்பி வேக வைக்கவும். அடுப்பின் அனலை குறைத்து விட்டு கறியை வேக விட்டு எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published.