நெத்திலி வறுவல்

நெத்திலி வறுவல்

 

 

தேவையான பொருட்கள் :

 

நெத்திலி மீன்           – ½ கிலோ (தலை, குடல் நீக்கியது)

கருவேப்பிலை          – 2  கொத்து

தனியாத்தூள்           – 4  மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள்         – 3  மேசைக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி

மஞ்சள்தூள்            – ½ மேசைக்கரண்டி

எலுமிச்சம்பழம்                 – 2

எண்ணெய்              – 4  குழிக்கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் நெத்திலி மீனை தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த நெத்திலியை போட்டு மிளகாய்த்தூள், தனியாத்தூள், அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசறவு. இதை குறைந்தது 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

 

  1. பிறகு ஒரு கடாயில் 4 குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதலில் கறிவேப்பிலையை பொறித்து எடுக்கவும். அதன் பிறகு, பிசறி வைத்த நெத்திலி மீனைப் போட்டு மொறு மொறு வென பொறித்து எடுக்கவும்.

 

  1. கடைசியாக பொறித்து நெத்திலி மீன்களின் மேல் பொறித்து வைத்த கறிவேப்பிலையைத் தூவி பரிமாறவும். தேவையெனில் இஞ்சி, பூண்டு விழுதைத் பயன்படுத்தலாம். சுவையான நெத்திலி வறுவல் தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.