மிளகின் பயன்பாடு என்ன?

pepper

மிளகு அதிக மருத்துவ குணங்களைக் கொண்டது.  மிளகின் மருத்துவ பயன்பாடுகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

மிளகு, வெல்லம், பசுநெய் ஆகிய மூன்றையும் சேர்த்து லேகியமாக கிளறி நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வர தொண்டைப்புண் குணமாகும்.

சிறிது சீரகம், 5 மிளகு, சிறிது கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து சிறிய உருண்டைகளாக்கி உலர்த்திக் கொள்ளவும்.  பின்பு தேவையான நேரத்தில் இதில் ஒரு உருண்டையை கற்பூரவல்லி இலைச்சாற்றில் கலக்க வேண்டும்.  இந்த உருண்டையை குழந்தைகள் சாப்பிட அவர்களுக்கு ஏற்படும் சளித் தொல்லை நீங்கும்.

ஈளை மற்றும் இருமல் இருப்பவர்கள் காலையில் எழுந்ததும் கறந்த பசும்பாலை காய்ச்சி அதில் சிறிது மினகையும் மஞ்சளையும் பொடியாக்கி கலந்து குடித்து வர மூன்று நாட்களில் குணம் அடையும்.

Leave a Reply

Your email address will not be published.