நண்டு ஃப்ரை

நண்டு ஃப்ரை

 

 

தேவையான பொருட்கள்  :

 

சதைப்பற்றுள்ள நண்டு         – 4

எலுமிச்சை சாறு                – பாதி பழம்

மஞ்சள் தூள்                   – ¼ தேக்கரண்டி

கார்லிக் பவுடர்                         – ¼ தேக்கரண்டி

மிளகுத்தூள்                    – ¼ தேக்கரண்டி

மிளகாய்த்தூள்                 – ½ – 1 தேக்கரண்டி

எண்ணெய்                      – 2 மேசைக்கரண்டி

உப்பு                           – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் நண்டை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு நண்டுடன் மிளகாய்த் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், தட்டிய பூண்டு, தேவையான உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பிசறி ஊற வைக்கவும்.

 

  1. அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் மசாலாவுடன் சேர்த்து பிரட்டி ஊற வைத்திருக்கும் நண்டை போட்டு முன்னும் பின்னுமாக பிரட்டு, மூடி போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேகும் படி பொறிக்கவும். சுவையான நண்டு ஃப்ரை ரெடி.

Leave a Reply

Your email address will not be published.