நண்டு ரோஸ்ட்

நண்டு ரோஸ்ட்

 

 

தேவையான பொருட்கள் :

 

சுத்தம் செய்யப்பட்ட நண்டு     – 1 கிலோ

பெரிய வெங்காயம்             – 2

தக்காளி                        – 2

பச்சை மிளகாய்                –  2

பூண்டு                          – 50 கிராம்

இஞ்சி                          – 50 கிராம்

சமையல் எண்ணெய்           – 50 மிலி

சின்ன ஜீரகம் பொடி            – 1 தேக்கரண்டி

கரம் மசாலா பொடி            – 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி                  – 1 தேக்கரண்டி

பெரிய ஜீரகம் பொடி            – 1 தேக்கரண்டி

எலும்பிச்சம் பழச்சாறு                  – 1 தேக்கரண்டி

மிளகாய் பொடி                         – 1 தேக்கரண்டி

மல்லி பொடி                   – 1 தேக்கரண்டி

மிளகு பொடி                   – 1 தேக்கரண்டி

மல்லி கொத்து                         – சிறிதளவு

கருவேப்பிலை                  – தேவையான அளவு

உப்பு                           – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் நண்டை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து தனியாக வைக்கவும்.பிறகு வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பிறகு இஞ்சி பூண்டு, சின்ன ஜீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக பொடித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய்யை ஊற்றி அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.

 

  1. எண்ணெய் நன்றாக சூடானவுடன் தாளிக்க கொஞ்சம் கருவேப்பிலையை போட்டு, பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு குறைவான தீயில் கொஞ்ச நேரம் மூடி போட்டு வைக்கவும்.

 

  1. வெங்காயம், தக்காளி வதங்கியவுடன், இஞ்சி,பூண்டு விழுதை போட்டு தொடர்ந்து வதக்கி விட்டபிறகு இதனுடன் மிளகாய் பொடி, மல்லி பொடி, கரம் மசாலா பொடி, மிளகு பொடி மற்றும் பெரிய ஜீரகம் பொடி எல்லாவற்றையும் போட்டு சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறி மிகவும் மிதமான அனலில் கொஞ்ச நேரம் மூடி வைக்கவும்.

 

  1. இதனுடன் நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை போட்டு நன்றாக பிரட்டி விடவும். பத்து நிமிடத்திற்கு குறைவான அனலில் வைக்கவும். அடிக்கடி திறந்து பார்த்து நண்டை பிரட்டி விட்டு அடி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். பாதி அளவு மூடிபோட்டு குறைவான தீயில் கொஞ்ச நேரம் வைக்கவும்.

 

  1. பிறகு எலும்பிச்சம் பழச்சாற்றை இதனுடன் ஊற்றி மீண்டும் பிரட்டி விடவும். பிறகு சிறிதளவு கருவேப்பிலை மற்றும் கொத்த மல்லியை நறுக்கி போட்டு இறக்கவும். சுவையான நண்டு ரோஸ்ட் தயார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.