நாட்டுக்கோழி வறுவல்

நாட்டுக்கோழி வறுவல்

 

 

தேவையான பொருட்கள் :

 

கோழி                  – 1 கிலோ

காய்ந்தமிளகாய்                – 20

இஞ்சி                  – சிறிதளவு

பூண்டு                  – முழுதாக ஒன்று

எண்ணெய்              – 1 கப்

எலுமிச்சை சாறு        – 2 மேசைக்கரண்டி

தனியா                 – 1 மேசைக்கரண்டி

மிளகு                  – 1 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள்         – 1 மேசைக்கரண்டி

உப்பு                   – 2 மேசைக்கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் கோழியை துண்டுகளாக வெட்டி கழுவி சுத்தம் செய்யவும். பிறகு அரை மேசைக்கரண்டி மஞ்சத்தூள், உப்புத்தூள் போட்டு ஒரு கப் நீரை ஊற்றி அரை பதத்திற்கு வேகவைக்கவும். பிறகு மீதி இருக்கும் பொருட்களுடன் எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

 

  1. அரைத்து வைத்திருக்கும் மசாலாவுடன் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றி நன்றாக கலக்கி கோழித்துண்டுகளை போட்டு நன்றாக பிரட்டி வைத்து ஊற விடவும்.

 

  1. இந்த கோழிக்கறியை இரண்டு மணி நேரத்திற்க்கு ஊற விடவும். பின்னர் அடி கனமான ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி நன்றாக காய்ந்ததும், அடுப்பின் அனலை குறைத்து விட்டு ஊற வைத்திருக்கும் கோழித்துண்டுகளை போட்டு பொன்முருவலாக பொறிக்கவும். சுவையான நாட்டுக்கோழி வறுவல் தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.