நெத்திலி கருவாடு சம்பால்

நெத்திலி கருவாடு சம்பால்

 

தேவையான பொருட்கள் :

 

நெத்திலி கருவாடு      – 100 கிராம்

வேர்கடலை            – 100 கிராம்

சர்க்கரை               – 1 மேசைக்கரண்டி

எண்ணெய்              – 100 மில்லி

உப்பு                   – தேவையான அளவு

காய்ந்த மிளகாய்       – 20

சின்ன வெங்காயம்     – 6

பூண்டு                  – 4 பல்

தக்காளி                – 1

 

செய்முறை விளக்கம் :

 

  1. காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பின்னர் முதலில் நெத்திலி கருவாட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். கழுவிய தண்ணீரை நன்றாக வடித்து விட்டு, ஈரம் போனதும் ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும் நெத்திலி கருவாட்டை பொறிக்கவும்.

 

  1. பொறித்த மீனை பேப்பர் டவலில் போட்டு வைக்கவும். பிறகு அதே எண்ணெயில் வேர்கடலையையும் வறுக்கவும். கடாயில் மீதி இருக்கும் எண்ணெயில் அரைத்த விழுதை கலந்து நன்றாக வதக்கிவிட்டு பச்சை வாசனை போனதும், பொறித்த கருவாடு, கடலை, சுவைக்கேற்ப உப்பு, 1 மேசைக் கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு தண்ணீர் சுண்டும் வரை கிளறிவிட்டு இறக்கினால் நெத்திலி கருவாடு சம்பால் தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.