பள்ளிபாளையம் சிக்கன்  

Pallipalayam chicken

 

தேவையான பொருட்கள் :

 

சிக்கன்                         – 1 கிலோ

சின்னவெங்காயம்      – ¼ கிலோ

எண்ணெய்              – 6 கரண்டி

வரமிளகாய்            – 10 (விதைகள் எடுக்கப்பட்டது)

தேங்காய் துருவல்      – 1 கப்

கறிவேப்பில்லை        – 6 இலை

கொத்தமல்லி           – 6 இலை

சிக்கன் மசாலா                 – 50 கிராம்

மஞ்சள் தூள்           – தேவையான அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. சிக்கனை சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவிய பின் தண்ணீரை வடிகட்டிவிடவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதலில் கடுகை போட்டு பொறிய விடவும். பிறகு கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு சில நிமிடம் வதக்கவும். வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

 

  1. இதனுடன் வடிகட்டிய சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும். இப்போது மஞ்சள் தூள் சிறிதளவு, சிக்கன் மசாலா தூள் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். வேகும் போது சிக்கனை கிளறி கொண்டே இருக்கவும்.

 

  1. பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் வரை வேகவிடவும். நன்றாக வெந்ததும் நறுக்கிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறவும். மீண்டும் சிறிதளவு தண்ணீர் தெளித்து சிக்கனை வேகவிடவும்.

 

  1. சிக்கன் நன்றாக வெந்ததை உறுதி செய்துக்கொண்டு நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார்.

Leave a Reply

Your email address will not be published.