புறா சாப்ஸ்

dove chops

 

தேவையான பொருட்கள் :

 

புறா கறி               – 2

மிளகாய் வற்றல்       – 4

வெங்காயம்            – 10

சீரகம்                  – 1 மேசைக்கரண்டி

மல்லி                  – 1 மேசைக்கரண்டி

மிளகு                  – 2 மேசைக்கரண்டி

தேங்காய்               – 1 துண்டு

எண்ணெய்              – 4 மேசைக்கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் புறாக் கறிகளை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிவைக்கவும். மிக்ஸியில் மிளகாய் வற்றல், சீரகம், மல்லி, மிளகு, தேங்காய் 1 துண்டு, வெங்காயம் 10 இவற்றை நன்றாக அரைக்கவும்.

 

  1. கறியுடன் அரைத்த மசாலாவை போட்டு தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் போட்டு கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் போட்டு கறியை 1க்கு 8 பங்கு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேக விடவும்.

 

  1. புறா கறியில் தண்ணீர் நன்கு வற்றிய பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலை தூவிப்போட்டு சிவக்க வதக்கிய பின் இறக்கவும். சுவையான புறா சாப்ஸ் தயார்.

Leave a Reply

Your email address will not be published.