பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ்

bachelor mutton chops

 

தேவையான பொருட்கள் :

 

மட்டன்                 – 1 கிலோ

தேங்காய்ப்பால்                 – 1 கப்

எண்ணெய்              – 100கி

மஞ்சள்பொடி           – 1 தேக்கரண்டி

மிளகுத்தூள்            – 1 தேக்கரண்டி

சீரகத்தூள்              – 1 மேசைக்கரண்டி

சோம்புத்தூள்           – 1 மேசைக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி

கரம்மசாலா பொடி     – 1 மேசைக்கரண்டி

மிளகாய்ப்பொடி        – 2 மேசைக்கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. மட்டனை கழுவி சுத்தம் செய்த பின் தண்ணீரை வடிகட்டி வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணை தவிர தேங்காய்ப்பால், மஞ்சள்பொடி, மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, கரம்மசாலா பொடி மற்றும் மிளகாய்ப்பொடி போட்டு பிசறி 1/2 நேரம் ஊற விடவும்.

 

  1. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசறிய மட்டனை போட்டு தண்ணீர் வற்றும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். மட்டனில் தண்ணீர் வற்றியதும் மட்டன் நிறம் மாறும். அப்போது அரை டம்ளர் தண்ணீர் தெளித்து கிளறி விட்டு குக்கரை மூடி 10 விசில் விட்டதும் இறக்கவும்.

 

  1. குக்கரில் பிரஷர் அடங்கியதும் திறந்து அடுப்பில் வைத்து சிறிது நேரம் கிளறவும். குக்கரில் மசாலா ஒட்டாமல் மட்டனுடன் மசாலா சேர்ந்ததும் இறக்கவும்.

 

Leave a Reply

Your email address will not be published.