முட்டை மசாலா

egg masala

 

 

தேவையான பொருட்கள் :

 

முட்டை             – 10

பச்சை மிளகாய்      – 10

வெங்காயம்          – 250 கிராம்

தக்காளி             – 250 கிராம் (நறுக்கியது)

மிளகாய் தூள்       – 2 மேசைக்கரண்டி

இஞ்சி விழுது        – 1 மேசைக்கரண்டி

சீரகம்               – 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்        – 2 மேசைக்கரண்டி

எண்ணெய்           – 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லி        – தேவையான அளவு

கறிவேப்பிலை       – தேவையான அளவு

உப்பு                – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் முட்டையை வேகவைக்கவும். அவித்ததும் ஓடு நீக்கி வெள்ளைக் கருவை பொடியாக நறுக்கி, மஞ்சள் கருவை உதிர்த்து வைக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி போட்டு நன்றாக வதக்கவும்.

 

  1. வதங்கியதும் அதில் தக்காளி, மஞ்சள் தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், முட்டை வெள்ளை, மஞ்சள் கரு, தேவையான அளவு உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலையை போடவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் மூடி கொதிக்க விட்டு இறக்கவும்.

 

Leave a Reply

Your email address will not be published.