மட்டன் சொதி மற்றும் வறுவல்

mutton

 

 

தேவையான பொருட்கள் :

 

மட்டன்              – ¼ கிராம்

சின்ன வெங்காயம்   – 8

பச்சை மிளகாய்      – 2

கிராம்பு              – 2

புளி                 – சிறிதளவு

தேங்காய்            – 1 மூடி

பட்டை              – 1 துண்டு

எலுமிச்சம்பழம்      – ½ பகுதி

சீரகம்               – ½ மேசைக்கரண்டி

மஞ்சள் பொடி       – ½ மேசைக்கரண்டி

மிளகு                      – ½ மேசைக்கரண்டி

சோம்பு              – 2 மேசைக்கரண்டி

மல்லி                      – 2 மேசைக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை       – தேவையான அளவு

உப்பு                – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். வறுவலுக்கு கறியை தனியாக எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாயை நீளமாக நறுக்கவும். ஒரு குக்கரில் மட்டனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்பொடி 3 கப் தண்ணீர் சேர்த்து 6 விசில் வரை வேக விடவும்.

 

  1. குக்கர் ஃபிரஷர் இறங்கியதும் மட்டன் தனியாகவும் வேக வைத்த தண்ணீர் தனியாகவும் பிரித்து வைக்கவும். சொதி செய்வதற்கு மட்டன் வேக வைத்த தண்ணீர் தேவைப்படும். பிறகு தேங்காயை துருவி முதல் பால் 1 கப், இரண்டாவது பால் 3 கப் எடுக்கவும்.

 

  1. மிக்ஸியில் மிளகு, சீரகம், சோம்பு, மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும். கறி வேக வைத்த தண்ணீர், இரண்டாவது தேங்காய் பால், அரைத்து வைத்திருக்கும் மசாலா அனைத்தயும் ஒன்றாக கலக்கவும்.

 

  1. ஒரு கடாயில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, அரை மேசைக்கரண்டி சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும். இதனுடன் கலந்து வைத்திருக்கும் சொதியை ஊற்றவும்.

 

  1. சொதியில் புளியை உருண்டையாக உருட்டி போடவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு சொதியை இறக்கவும். முதல் தேங்காய்பாலை சொதியில் ஊற்றவும். சொதி ஆறியதும் எலுமிச்சம்பழச்சாறை பிழியவும்.

 

  1. கறி வறுவல்: முதலில் மிக்ஸியில் மிளகு, சீரகம், சோம்பு போட்டு நன்றாக அரைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும். தனியாக எடுத்து வைத்த கறியை இதில் போடவும். இதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக சுருள வறுத்து எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published.