தலைவலி வருவது எதனால்?

headache

ரொம்ப பேருக்கு தலைவலிப் பிரச்சினை காலம் காலமாக இருக்கிறது.  ஆனால் அவர்களோ சீக்கிரம் நிவாரணம் அடைவதற்கு ஒரு வலி நிவாரணி மாத்திரைப் போட்டுக் கொண்டு காலத்தை கழிக்கிறார்கள்.

ஆனால் உலகத்தில் பலருக்கும்  தலைவலி என்ற ஒரு வியாதி கண்டிப்பாக வந்திருக்கும். ஒவ்வொரு தலைவலிக்கும் பல காரணங்கள் இருக்கும்.  மாணவர்களுக்கு சில நேரங்களில் கடுமையான தலைவலி வருகிறது.  இதற்குக் காரணம் அவர்களது கண்பார்வை கோளாறு காரணமாக இருக்கலாம்.  கண்பார்வை கோளாறு காரணமாக இருந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம்.  அப்படி கண்ணாடி போட்டுக் கொண்டால் தலைவலி இல்லாமல் போய்விடும்.

கண்நீர் அழுத்த நோய் இருந்தால் தலைவலி வரும்.  இந்த தலைவலி காலையில் தூங்கி எழுந்தவுடன் வரும்.  சாதாரணமாக கண்மூடி உட்கார்ந்தாலோ அல்லது இருட்டில் உட்கார்ந்தோலோ சிலருக்கு தலைவலி வருவது உண்டு.

இரத்த அழுத்தம் அதிகரித்தாலும் தலைவலி வரும்.  பல் சொத்தையினால் ஏற்படும் அவஸ்தையாலும் தலைவலி வரும்.  சைனஸ் பிரச்சினை இருந்தாலும் தலைவலி வரும்.  ஆக, எந்த காரணத்திற்காக தலைவலி வருகிறது என்பதை அறிந்து அதற்குண்டான மருந்துகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கிய வாழ்விற்கு துணை புரியும்.

Leave a Reply

Your email address will not be published.