மட்டன் முட்டை சாப்ஸ்

மட்டன் முட்டை சாப்ஸ்

 

தேவையான பொருட்கள் :

 

மட்டன்              – 500 கிராம்

முட்டை             – 4

மிளகு               – 1 மேசைக்கரண்டி

சோம்பு              – 1 மேசைக்கரண்டி

சீரகம்               – 1 மேசைக்கரண்டி

கசகசா              – ½ மேசைக்கரண்டி

மிளகு தூள்          – 2 மேசைக்கரண்டி

எண்ணெய்           – 100 கிராம்

உப்பு                – தேவையான அளவு

 

அரைக்க வேண்டிய பொருட்கள் :

 

பூண்டு        – 6 பல்

இஞ்சி        – சிறிதளவு

பட்டை       – 1

கிராம்பு       – 1

ஏலக்காய்     – 1

மிளகாய்      – 12

தேங்காய்     – 2 சில்

மஞ்சள் தூள் – சிறிதளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சாப்ஸ் போல் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்து தனியே வைக்கவும்.

 

  1. பிறகு மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருள்களை போட்டு நன்றாக அரைக்கவும். அரைத்த மசாலாவில் சாப்ஸ் போல் வெட்டிய மட்டனை பிரட்டி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.

 

  1. ஒரு குக்கரில் மட்டனுடன், தேவைக்கேற்ப உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி 7 விசில் வரும் வரை வேக வைக்கவும். குக்கரில் பிரஷர் இறங்கியதும் சிறிதளவு நீர் இருக்கும் அதை அப்படியே அடுப்பில் வைத்து கிளறி விடவும்.

 

  1. ஒரு வாணலியில் பொறிக்கும் அளவிற்க்கு எண்ணெய் ஊற்றி கறியை அடித்த முட்டையில் நனைத்து போடவும். உடனுக்குடன் திருப்பி போட்டு எடுக்கவும். 3 கறியை ஒரு முறைக்கு போட்டு பொறித்து எடுக்கவும். மட்டன் முட்டை சாப்ஸ் சாப்பிட தயார்.

Leave a Reply

Your email address will not be published.