மட்டன் யாழ்பாண வறுவல்

mutton

 

 

தேவையான பொருட்கள் :

 

மட்டன்              – 500 கிராம்

எண்ணெய்           – 50 கிராம்

சின்ன வெங்காயம்   – 20

தக்காளி             – 2

பச்சை மிளகாய்      – 2

பட்டை              – 1

கிராம்பு              – 1

கொத்தமல்லி        – சிறிதளவு

கருவேப்பிலை       – சிறிதளவு

தனியா தூள்         – 1 மேசைக்கரண்டி

சோம்பு              – ½ மேசைக்கரண்டி

சிரகம்                      – ½ மேசைக்கரண்டி

உப்பு                – தேவையான அளவு

 

அரைக்க தேவையான பொருட்கள் :

 

மஞ்சள் தூள் – ½ மேசைக்கரண்டி

சோம்பு       – ½ மேசைக்கரண்டி

சீரகம்        – ½ மேசைக்கரண்டி

கசகசா       – 1 மேசைக்கரண்டி

இஞ்சி        – சிறிதளவு

பூண்டு        – 8 பல்

 

வறுத்து தூள் செய்யவேண்டிய பொருட்கள் :

 

சீரகம்        – ½ மேசைக்கரண்டி

சோம்பு       – ½ மேசைக்கரண்டி

மிளகாய்      – 10

பட்டை       – 1

ஏலக்காய்     – 1

 

செய்முறை விளக்கம் :

 

  1. மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். வறுத்து தூள் செய்யவேண்டிய பொருட்களை ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வறுத்து தூள் செய்யவும். கறியுடன் அரைத்த தூளை சேர்ந்த்து நன்றாக பிசறவும்.

 

  1. சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் சீரகத்தை போட்டு தாளிக்கவும்.

 

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி அரிந்து வைத்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும். இதனுடன் கறி கலவையையும் சேர்க்கவும். கறியில் உள்ள தண்ணீர் வற்றியதும் உப்பு, தனியாத் தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

 

  1. கறியில் உள்ள நீர் வற்றியதும் தூள் செய்தவற்றை போட்டு மிதமான தீயில் பத்து நிமிடம் வரை கிளறியதும் இறக்கவும். சுவையான மட்டன் யாழ்பாண வறுவல் தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.