வெங்காய மீன் ஃப்ரை

வெங்காய மீன் ஃப்ரை

 

 

தேவையான பொருட்கள் :

 

துண்டு மீன்          – ¼ கி

வெங்காயம்          – 1

மிளகாய்             – 3

எலுமிச்சம் பழம்     – 1

கறிவேப்பிலை       – சிறிதளவு

எண்ணெய்           – 1 மேசக்கரண்டி

மஞ்சத்தூள்          – ½ தேக்கரண்டி

மிளகாய்த்தூள்              – 1 தேக்கரண்டி

உப்புத்தூள்           – 1 தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மீனுடன் மிளகாய்த்தூள், மஞ்சத்தூள், சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை பழச்சாறை ஊற்றி மீனை 2 மணி நேரம் ஊறவிடவும். பச்சைமிளகாயயும் வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்

 

  1. ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஊற வைத்த மீனைப்போட்டு பொறித்து எடுத்து தனியாக வைக்கவும். அதே வாணலியில் எண்ணெயை ஊற்றி காயவிட்டு மிளகாய், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கவும்.

 

  1. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் பொறித்தமீனை போட்டு குறைவான தீயில் வதக்கவும். சுவையான வெங்காய மீன் ஃப்ரை தயார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.