வெள்ளை சிக்கன் வறுவல்

வெள்ளை சிக்கன் வறுவல்

 

 

தேவையான பொருட்கள் :

 

சிக்கன்                     – ½ கிலோ

சின்ன வெங்காயம்          – 5

மிளகுத் தூள்               – ½ கரண்டி

சீரகம்                      – ½ கரண்டி

எலுமிச்சை சாறு            – ½ கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது       – 1½ கரண்டி

எண்ணெய்                  – 4 கரண்டி

உப்பு                       – ¾ கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு சிக்கன் துண்டுகளில் சிறிய சிறியதாக கீறல் போடவும். ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் சின்ன வெங்காயம், மிளகுத் தூள், சீரகம், எலுமிச்சை சாறு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு மணிநேரம் ஊறவிடவும்.

 

  1. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் பொறித்து எடுக்கவும். சுவையான வெள்ளை சிக்கன் வறுவல் தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.