உப்புக்கண்டம்

உப்புக்கண்டம்

 

 

தேவையான பொருட்கள் :

 

மட்டன்              – ½ கிலோ,

மஞ்சள் தூள்        – 1 தேக்கரண்டி ,

இஞ்சி               – ½ அங்குல துண்டு,

பூண்டு               – 10 பல்,

காய்ந்த மிளகாய்     – 10,

உப்பு                – தேவையான அளவு.

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். கழுவிய மட்டனை சரியான துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் மஞ்சள் தூள், பூண்டு, மிளகாய், இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் மட்டனை சேர்த்து நன்கு பிசறவும்.

 

  1. பிறகு மட்டன் கலவையை ஒரு நூல் அல்லது மெல்லிய கம்பியில் கோர்த்து வெயிலில் நன்றாக காய விடவும். நன்றாக காய்ந்ததை சரி பார்த்து டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். உப்புக்கண்டம் தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.