கருவாட்டு குழம்பு

கருவாட்டு குழம்பு

 

 

தேவையான பொருட்கள் :

 

நெத்திலி கருவாடு    – 15

சின்ன வெங்காயம்   – ¾ கப்

தக்காளி             – 1 (நறுக்கியது)

பெருங்காயத்தூள்    – ¼ தேக்கரண்டி

கடுகு, உளுந்து       – ½ தேக்கரண்டி

வெந்தயப்பொடி      – ¾ தேக்கரண்டி

சாம்பார் பொடி       – 1 ½ தேக்கரண்டி

கறிவேப்பிலை       – சிறிதளவு

புளி                 – சிறிதளவு (கரைத்தது)

உப்பு                – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. கருவாட்டு தலையை கில்லிவிட்டு தண்ணீரில் உப்பு சேர்த்து ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து மண் போகும் வரை தண்ணீரில் கருவாட்டை அலசவும்.

 

  1. கடாயில் எண்ணைய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பை தாளித்து பெருங்காயத் தூள், வெந்தயப் பொடி போட்டு அதனுடன் கருவாட்டையும் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்.

 

  1. இதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி விட்டு சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சாம்பார் பொடி போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும்.

 

  1. ஒரு கொதி வந்ததும், புளிக் கரைசலை ஊற்றி கொஞ்சம் நல்லெண்ணைய் ஊற்றி கொதித்து எண்ணைய் மேலே பிரிந்து வரும் போது கருவாடு நன்றாக வெந்து விடும். பிறகு நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.

 

 

Leave a Reply

Your email address will not be published.