கப்ஸா சோறு

கப்ஸா சோறு

தேவையான பொருட்கள் :

 

முழு கோழி         – 2

அரிசி               – ½ கிலோ

எண்ணெய்           – 50 மில்லி

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ½ மேசைக்கரண்டி

பட்டர்               – 1 தேக்கரண்டி

பட்டை              – 2 (ஒரு விரல் நீளம்)

தக்காளி             – 3

ஏலக்காய்            – 3

கிராம்பு              – 4

வெங்காயம்          – 3

உப்பு                – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. அரிசியை இருபது நிமிடம் தனியாக ஊற வைக்கவும். முழு கோழி இறைச்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் நான்கு டம்ளர் தண்ணீர் எடுத்து கொண்டு சுத்தம் செய்த கோழியை அப்படியே போட்டு வேக விடவும். வேக வைத்து அந்த தண்ணீரை தனியாகவும், கோழியை தனியாகவும் வைக்கவும்.

 

  1. தம் போடுவதற்கு வசதியான ஒரு பத்திரத்தை காயவைத்து அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் போட்டு காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கி வாசனை வந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

 

  1. வெங்காயம் சற்று வதங்கினால் போதுமானது. இதில் இஞ்சி, பூண்டு பேஸ்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் தக்காளி சேர்த்து வதக்கி தனியாக வைத்துள்ள கோழித் தண்ணீரை தாளித்ததில் ஊற்றவும் .

 

  1. நன்றாக தண்ணீரை கொதிக்கவிட்டு அரிசியை கொட்டி தேவையான உப்பும் சேர்த்து வேக வைத்துள்ள கோழியையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து தம் போடவும். பிறகு பரிமாறலாம். அரேபியர்களுக்கு மிகவும் பிடித்தமானது இந்த கப்சா சோறு.

Leave a Reply

Your email address will not be published.