சிக்கன் புலாவ்

சிக்கன் புலாவ்

 

 

 

தேவையான பொருட்கள்  :

 

பாஸ்மதி அரிசி             – 2 கப்

சிக்கன்                     – ½ கிலோ

வெங்காயம்                 – 2

பச்சை மிளகாய்             – 4

தயிர்                       – ½ கப்

தேங்காய்ப்பால்             – 1 ½ கப்

புதினா                     – சிறிதளவு

கரம் மசாலா               – 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது        – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள்                – ¼ தேக்கரண்டி

ஏலக்காய்த்தூள்             – ¼ தேக்கரண்டி

ஜாதிக்காய்த்தூள்            – ¼ தேக்கரண்டி

நெய்                       – ½ மேசைக்கரண்டி

எண்ணெய்                  – தேவையான அளவு

உப்பு                       – தேவையான அளவு

 

தாளிக்க தேவையான பொருட்கள்  :

 

கறிவேப்பிலை       – சிறிதளவு

பட்டை              – 1 துண்டு

கிராம்பு              – 4

ஏலக்காய்            – 2

பிரியாணி இலை     – 2

 

செய்முறை விளக்கம் :

 

  1. சிக்கனை சுத்தம் செய்யவும். சிக்கனுடன் தயிர், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது போட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும், பச்சை மிளகாயை கீறிவிடவும். இதை எண்ணெயில் பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.

 

  1. குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி கறிவேப்பிலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை தாளித்து பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, மஞ்சள்தூளை போட்டு வதக்கவும்.

 

  1. பிறகு ஊறவைத்துள்ள சிக்கனையும், ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கிவிடவும். இதனுடன் அரிசி, தேவையான அளவு உப்பு, தேங்காய்ப்பால், ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரும் வரை வேகவிடவும். வெந்ததும் பொறித்த வெங்காயம், ஏலக்காய்த் தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து கிளறிவிட்டு பரிமாறவும்.

 

Leave a Reply

Your email address will not be published.