சிக்கன் ப்ரைடு ரைஸ்

முட்டை ஃப்ரைட் ரைஸ்

 

தேவையான பொருட்கள் :

 

பாசுமதி அரிசி       – 1 கப்

குடை மிளகாய்      – ¼ கப்

கோழி இறைச்சி      – ½ கப் ( நறுக்கியது )

சோயா சாஸ்        – 1 மேசைக்கரண்டி

சில்லி சாஸ்         – 1 மேசைக்கரண்டி

பூண்டு விழுது       – 1 மேசைக்கரண்டி

இஞ்சி விழுது        – 1 மேசைக்கரண்டி

முட்டைகோஸ்      – சிறிதளவு

வெங்காயத்தாள்      – சிறிதளவு

கேரட்               – 1

முட்டை             – 1

பெரிய வெங்காயம்   – 1

உப்பு                – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. கோழிக்கறியை துண்டுகளாக வெட்டி கழுவி சுத்தம் செய்யவும். பாசுமதி அரிசியை ஒரு பாத்திரத்தில் சிறிது நேரம் ஊற வைத்து, சரியான பதத்தில் சாதம் உதிரியாக வடிக்கவும்.

 

  1. வெங்காயம், முட்டைகோஸ், காரட், குடை மிளகாய் ஆகியவற்றை நீள வாக்கில் பொடியான துண்டுகளாக நறுக்கவும். முட்டையை உடைத்து பொறியல் போல் வேக வைக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிகளையும் தனியாக ஒரு வதக்கு வதக்கவும்.

 

  1. இரும்பு கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு சிவந்த நிறமாகும் வரை வதக்கவும். இத்துடன் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும். இப்போது வடித்து வைத்துள்ள சாதம், கோழிக்கறி, முட்டை பொறியல், காய்கறிகள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக பிரட்டவும்.

 

  1. இதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து தீயை கொஞ்சம் அதிகமாக வைத்து சிறிது நேரம் கிளறிவிட்டு வேக வைத்து இறக்கினால் சுவையான சிக்கன் ப்ரைடு ரைஸ் தயார்.

Leave a Reply

Your email address will not be published.