செட்டிநாட்டு கோழி பிரியாணி

தேங்காய் பால் சிக்கன் பிரியாணி

 

தேவையான பொருட்கள் :

 

கோழி                             – ½ கிலோ (எலும்போடு பெரிதாக வெட்டிவைத்தது)

பாசுமதி அரிசி              – 1 ½ கப்

தேங்காய் பால்              – 1 ½ கப்

தண்ணீர்                    – 1 ½ கப்

தயிர்                       – ½ கப்

கொத்தமல்லி, புதினா        – ½ கப்

வெங்காயம்                 – 1 (பொடித்தது)

தக்காளி                    – 1 (பொடித்தது)

எண்ணெய்                  – 100 மில்லி

மஞ்சள் தூள்               – ½ மேசைக்கரண்டி

மிளகாய் தூள்              – ½ மேசைக்கரண்டி

கரம் மசாலா தூள்          – ¼ மேசைக்கரண்டி

நெய்                       – 3 மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது        – 1 மேசைக்கரண்டி

லவங்கம்                   – 5

பிரியாணி இலை            – 1

ஏலக்காய்                   – 3

பச்சை மிளகாய்             – 5

பட்டை                     – சிறு துண்டு

உப்பு                       – தேவையான் அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். கோழிக்கறியை எலும்போடு பெரிய துண்டுகளாக வெட்டி சுத்தமாக கழுவி வைக்கவும். பிறகு கோழிக்கறியுடன் பாதி தயிர், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு போட்டு கிளறி ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சி பூண்டை விழுதாக அரைக்கவும்.

 

  1. பிரியாணி செய்யத் தகுந்த ஒரு பாத்திரத்தில் எண்ணெய் இரண்டு மேசை கரண்டி கொஞ்சம் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்க பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொறிய விடவும்.

 

  1. இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் நறுக்கிய தக்காளியை போட்டு மசிய விடவும்.

 

  1. இத்துடன் மீதி இருக்கும் தயிர், மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லித் தலை, புதினா சேர்த்து கலக்கி விட்டு மூன்று நிமிடம் வைக்கவும். நன்றாக மசிந்து மிளகாய் தூள் பச்சை வாசம் போனதும், ஊற வைத்துள்ள கோழித் துண்டுகளை போட்டு வேக வைக்கவும்.

 

  1. கறி வெந்ததும் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அரிசியை போட்டு மூடியை கொஞ்சம் திறந்த வாக்கில் வைத்து கறியை முக்கால் பாகம் வேக வைக்கவும். அதன் மேல் கரம் மசாலாத் தூளை தூவி விடவும்.

 

  1. சிறிதளவு நெய் சேர்த்து மிதமான தீயில் பத்திலிருந்து பின்னிரண்டு நிமிடங்கள் வைக்கவும். சாதம் முழுமையாக வெந்ததும் இறக்கி விடவும். பரிமாற சுவையான செட்டிநாட்டு கோழி பிரியாணி தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.