செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

பிஸ் ப்ரைட் ரைஸ்

 

 

தேவையான பொருட்கள்  :

 

சீரக சம்பா அரிசி    – 3 கப்

மட்டன்              – ½ கி

மிளகாய்தூள்        – ½ தேக்கரண்டி

கரம்மசாலா          – ¼ தேக்கரண்டி

இஞ்சி               – 50 கிராம்

பூண்டு               – 25 பல்

பட்டை              – 4 துண்டு

ஜாதிக்காய்           – பாதி

பெரிய வெங்காயம்   – 4

தக்காளி             – 3

பச்சை மிளகாய்      – 4

கிராம்பு              – 4

ஏலக்காய்            – 4

முந்திரி             – 10

சின்ன வெங்காயம்   – 15

எலுமிச்சம்பழம்      – பாதி பழம்

மல்லி                      – 1 கட்டு

நெய்                – ½ கப்

எண்ணெய்           – ½ கப்

தயிர்                – ½ கப்

தேங்காய்            – 1 மூடி

புதினா               – 1 கட்டு

 

தாளிக்கத் தேவையான பொருட்கள்  :

 

கிராம்பு              – 3

ஏலக்காய்            – 3

பிரிஞ்சி இலை       – 1

பட்டை              – 3 சிறிய துண்டு

சோம்பு              – 1 தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம்:

 

  1. மட்டன் துண்டுகளை நன்றாக கழுவவும். அரிசியை ஊறவைத்து தனியாக வைக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை நெய் விட்டு வறுத்து மைபோல் அரைத்துக்கவும். பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிவிடவும்.

 

  1. பூண்டை தனியாக அரைக்கவும். இஞ்சி, துருவிய தேங்காய், முந்திரிபருப்பு இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து நான்கு கப் பால் எடுத்து வைக்கவும்.
  2. குக்கரில் மட்டன் துண்டுகளை கால் கப் தயிர், மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, கரம்மசாலா, தேவையான அளவு உப்பு போட்டு ஐந்து விசில் வரும் வரை வேகவைக்கவும்.

 

  1. பிரியாணி செய்வதற்க்கு தேவையான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி காய்ந்ததும் நன்றாக சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலையை போட்டு தாளிக்கவும். இவற்றுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை சேர்க்கவும். வெங்காயம் பொன் நிறமாக வதங்கியதும், அரைத்து  வைத்திருக்கும் பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

 

  1. வதங்கியவையுடன் அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் விழுது, மிளகாய் தூள் போட்டு வதக்கவும். நன்றாக வதக்கினால் எண்ணெய் பிரியும் அப்போது நறுக்கிய தக்காளியை போடவும். தக்காளி நன்றாக வதங்கி தொக்கு போல் ஆனதும் தயிர் சேர்த்து கலக்கவும்.

 

  1. இப்போது எடுத்து வைத்திருக்கும் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து ஆறு கப் அளந்து ஊற்றவும். தேவையான அளவு உப்பு, புதினா, கொத்தமல்லி தலையை சேர்க்கவும்.

 

  1. இவை ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும். அரிசி பாதி வெந்ததும் எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்துவிடவும். நன்றாக வெந்ததும் அப்படியே மூடி போட்டு அனலில் பதினைந்து நிமிடம் வைத்து இறக்கவும். செட்டிநாட்டு மட்டன் பிரியாணி தயார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.