கிரீன் டீயின் நன்மைகள்

Green Tea

கிரீன் டீ

தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உட் கொள்ளப்படும் பானம் தேநீர் எனப்படும் ”டீ”.

”கேமில்லா சினன்சிஸ்” என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆண்டு முழுவதும் விளையும் பசுமையான பயிரான தேயிலையின் வடிசாறே தேநீர் ஆகும்.

தாவரம் பயிரிடப்படுகிறது. விளைந்த தாவரம் ஒன்றாக இருந்தாலும் அதன் தயாரிப்பு முறை மாறுபடுகிறது.  மாறுபடுகிறபோது டீ பலவகையாக வகைப்படுத்தப்படுகிறது. ஒய்ட் டீ, கறுப்பு டீ, கிரீன் டீ என்று வகைப்படுத்தப்படுகிறது.

பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனே உலர்த்தபட வேண்டும். உலர்த்த படாவிட்டால் வாடீ வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடைந்து விடுகிறது.  பிறகு அதில் அடங்கியுள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று ”டானிக்” வெளிவருகிறது.  இதுவே டீ யின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.  இது ஒரு வகையான நொதித்தல் வினை போன்றதாகும்.

கிரீன் உற்பத்தியில் இவ்வாறு நொதிக்க விடுவதில்லை.  இளங்குருத்து தேயிலைகளை உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப்பட்டு கசப்பு சுவை தரக்கூடிய ”பாலிபீனால்கள்” சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது.

கிரீன் டீ யில் உள்ள வேதிப் பொருட்களின் பெயர்களை தெரிந்து கொள்வோம்.

கிரீன் டீயில் எபிகேடசின், எபிகேடசின்-3-கேலேட், எபிகேலோகேடசின், எபிகேலோ கேடசின்-3-கேலேட் ஆகியவற்றோடு ஃபு!ளுரைடுகள், மாங்கனீசு, பொட்டாசியம், அரோடினாய்ட்ஸ், காஃபின், தெயோப்ஃலின், தெயோஃபிளேவின் போன்ற சேர்மங்கள் அடங்கியுள்ளன.

உடலுக்கு அவசியமான ”ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்” கிரீன் டீயிலிருந்து அதிக அளவில் கிடைக்கிறது.  வைட்டமின் ”சி” யிலிருந்து கிடைக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடெண்ட் விகிதத்தைவிட 100 மடங்கும் வைட்டமின் ”ஈ” யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீயில் கிடைப்பதாக கூறப்படுகிறது.

கிரீன் டீ எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ குணம் உடையது என்பதை பாருங்கள்.

கேன்சர்.

கிரீன் டீ யிலுள்ள பாலிபினால்கள் ழயூமர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.  அவற்றின் DNA உருவாக்கத்தை தடுப்பதோடு நல்ல திசுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கான்சர் திசுக்களை அழிக்கின்றன.

நீரிழிவு.

கிரீன் டீ பாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து நிறுத்துகிறது. மற்றும் ”ஸ்டார்ச்” சை மெதுவாக சிதைவடையச் செய்கிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. அத்துடன் இது ”இன்சுலீனின்” செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்கின்றது.

இதயம்.

இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து எனப்படும் LDL டிரைகிளிசரைடுகளின் அளவைக் கட்டுப்படுத்தி நல்ல கொழுப்ப எனப்படும் HDLன் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.

ஆர்த்ரைட்டீஸ்.

ஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.       மூட்டுக்களை பலத்துடன் வைத்திருப்பதிலும் கிரீன் டீ யின் பங்கு உண்டு.

ஓபிஸிட்டி.

உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்துகிறது. கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப்படுத்த செய்கிறது. இதனால் ஓபிஸிட்டி எனப்படும் உடற்பருமன் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

முதுமை.

வயதாவதைத் தடுக்க முடியாது. ஆனால் சீக்கிரமே சுருக்கம் வந்துவிடுகிறது. கிரீன் டீ சாப்பிடுங்கள். முதுமை அடைவதை தடுக்கலாமே. கிரீன் டீ உடல் திசுக்களில் உற்பத்தியாகும் ”ஃபிரீ ராடிகல்” எனப்படும் தனி உறுப்புகளை உறிஞ்சப்படுவதால் ஏற்படும் DNA சிதைவு தடுக்கப்பட்டு எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

பல்.

கிரீன் டீ யில் ஃப்ளுரைடு பற்சிதைவு மற்றும் பற்குழிகள் ஏற்படுவதை தடுக்கச் செய்கிறது.                                                                                             கிரீன் டீ வாயில் உற்பத்தியாகக் கூடிய ”பாக்டீரியா”க்கள் வளர்ச்சியைத் தடுக்கவும் அதன் காரணமாக வரும் பல் சம்பந்தப்பட்ட நோய்கள், வாய் அசுத்தம் போகவம் உதவி செய்கிறது.

அழகு.

கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.  முகம் பளபளப்பான தோற்றத்தை பெறுகிறது.  புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

பயன்படுத்தும் முறை

பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி (டீ) என்பதுபோல இது ”பிளெய்ன் டீ” யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே இதன் சிறப்பம்சமாகும்..

இது ”டிப் டீ” எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.

மற்ற டீ போல நேரிடையாக சுட வைக்கத் தேவையில்லை.  அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.80-85 டிகிரி வெப்பநிலைக்கு சுட வைக்கப்பட்ட தண்ணீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் அமுக்கி வைத்தாலே போதும். இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ குடிக்கலாம். சுவை வேண்டுமானால் சர்க்கரை அல்லது தேன் கலந்து அருந்தலாம்.

விருப்பமானவர்கள் நறுமணத்திற்கு புதினா இலைகள், எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.

ஒருமுறை சாறு இறக்கிய பிறகு தேவைப்பட்டால் மீ்ண்டும் சுடுநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிகட்டி குடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.