தலப்பா கட்டு மட்டன் பிரியாணி

தலப்பா கட்டு மட்டன் பிரியாணி

 

 

தேவையான பொருட்கள் :

 

சீரக சம்பா அரிசி           – ½ கிலோ

மட்டன்                     – ½ கிலோ

எலுமிச்சம் பழம்            – ½ மூடி

எண்ணெய்                  – ¼ கப்

தயிர்                       – 1 கப்

நெய்                       – 3 மேசைக்கரண்டி

டால்டா                    – 3 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள்              – 4 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது       – 1 மேசைக்கரண்டி

பெரிய வெங்காயம்          – 2

தக்காளி                    – 2

கிராம்பு                     – 2

ஏலக்காய்                   – 2

பட்டை                     – சிறிதளவு

உப்பு                       – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியைக் கழுவி 1/2 நேரம் ஊற வைக்கவும். மட்டன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். பிரியாணி செய்வதற்கு உகந்த ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

 

  1. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கி மசிந்ததும், மட்டன் துண்டுகளை போட்டு வதக்கவும்.

 

  1. பச்சை வாடை போகும் வரை வதக்கி விட்டு பிறகு மிளகாய்த் தூள், தயிர், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி மூடி போடவும். தண்ணீர் நன்கு கொதி வந்ததும் ஊற வைத்துள்ள அரிசியைப் போடவும்.

 

  1. அரிசி அரை வேக்காடு வெந்ததும் , தேவையான அளவு உப்பு போடவும். அரிசி நன்றாக வெந்ததும் நெய், டால்டா சேர்த்து கிளறி விடவும் பின்பு இறக்கவும். சுவையான தலப்பா கட்டு மட்டன் பிரியாணி தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.