பிஸ் ப்ரைட் ரைஸ்

பிஸ் ப்ரைட் ரைஸ்

 

 

தேவையான பொருட்கள் :

 

பொறித்த மீன்       – 2 துண்டுகள் (முள் நீக்கியது)

சாதம்               – 1 கப்

கேரட்               – 1 கப்

பீன்ஸ்               – 1 கப்

கோஸ்              – 1 கப்

பூண்டு               – 7 பல்

வெங்காயம்          – 2

முட்டை             – 1

பச்சைமிளகாய்       – 1

சோயா சாஸ்        – 1 கரண்டி

ப்ரைட் ரைஸ் பொடி  – 1 கரண்டி

எண்ணெய்           – 5 கரண்டி

டொமெட்டோ சாஸ்  – 1 தேக்கரண்டி

உப்பு                – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. அரிசியை வேகவைத்து தனியாக வைக்கவும். காய்கறிகளை நறுக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். மீனை வேக வைத்து முள்ளை நீக்கி ஒரு தட்டில் வைக்கவும்.

 

  1. மேலே குறிப்பிட்டுள்ளவை தயாரானதும் ஒரு இரும்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு சேர்த்து கலக்கவும். இதனுடன் முள் நீக்கிய மீனை சேர்த்து வதக்கவும்.

 

  1. பின் பொடியாய் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். காய்கறி பாதி வெந்ததும் ப்ரைட் ரைஸ் பொடியை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து சாஸ் வகைகளை சேர்த்து வதக்கவும். கலவை நன்றாக வெந்ததும் சாதத்தை கொட்டி நன்றாக பிரட்டிவிட்டு இறக்கவும். ரைஸ் உதிரியாக இருக்க வேண்டும். சூடான பிஸ் ப்ரைட் ரைஸ் தயார்.

Leave a Reply

Your email address will not be published.