பீஸ் கிச்சடி வித் சிம்பிள் சில்லி சிக்கன்

chilli chicken pack

 

தேவையான பொருட்கள்  :

 

பாஸ்மதி அரிசி      – 1½ டம்ளர்

தேங்காய் பால்       – 1 டம்ளர்

வெங்காயம்          – 1 (நறுக்கியது)

புதினா தலை        – சிறிதளவு

தக்காளி             – 2 (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

எண்ணெய்           – 5 தேக்கரண்டி

நெய்                – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்        – 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்   – 1 ½ தேக்கரண்டி

பச்சை பட்டாணி     – ¼ கப் (வேகவைத்தது)

பட்டை              – 2 இன்ச் அளவு

பச்சை மிளகாய்      – 2 (கீறியது)

 

 

சிக்கனுக்கு தேவையான பொருட்கள்  :

 

ரெட் ஃபுட் கலர்      – சிறிதளவு

போன் லேஸ் சிக்கன் – ¼ கிலோ

இஞ்சி,பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

கார்ன் ஃப்ளார்        – 1 தேக்கரண்டி

சோயா சாஸ்        – ¼ தேக்கரண்டி

தக்காளி சாஸ்       – ¼ தேக்கரண்டி

பிரட் கிரம்ஸ்        – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள்       – 1 தேக்கரண்டி

கடலை மாவு               – 1 தேக்கரண்டி

எண்ணெய்           – தேவையான அளவு

உப்பு                – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும். குக்கரில் தாளிக்க தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடானதும் பட்டை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விடவும். வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு அடிபிடிக்காமல் வதக்கவும்.

 

  1. பின்பு வேக வைத்த பட்டாணி, புதினா, மல்லி தலை மற்றும் மசாலாத் தூள் வகைகள் போட்டு வதக்கவும். கலவையில் எல்லாவற்றையும் சேர்த்து வதங்கியதும் தேங்காய் பால், ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ருசிக்கேற்ப உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

 

 

  1. கொதி வந்ததும் ஊற வைத்திருக்கும் அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி போட்டு கலக்கவும். பிறகு நன்றாக கொதிக்கும் போது குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் அடுப்பின் அனலை குறைத்துவிடவும். பிறகு எட்டு நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

 

  1. சிக்கன் ஃப்ரை : சிக்கனை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி அதனுடன் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து பிரட்டி, பத்து அல்லது பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும். பத்து நிமிடம் கழித்து எண்ணெயில் பொறித்தெடுக்கவும்

 

Leave a Reply

Your email address will not be published.