மட்டன் பிரியாணி

தேங்காய் பால் சிக்கன் பிரியாணி

 

தேவையான பொருட்கள்  :

 

அரிசி               – 1 கிலோ

மட்டன்              – 1 கிலோ

வொங்காயம்          – ¼ கிலோ

தக்காளி             – ¼ கிலோ

மிளகாய் தூள்         – 1½ கரண்டி

மல்லித்தூள்            – 2 கரண்டி

நெய்                – 50 கிராம்

எண்ணெய்             – 50 கிராம்

இஞ்சி                – 100 கிராம்

பூண்டு                  – 100 கிராம்

தயிர்                     – 250 கிராம்

பச்சைமிளகாய்       – 10

பட்டை              – 10

லவங்கம்              – 10

ஏலக்காய்            – 10

எலும்மிச்சை          – 1

புதினா                  – ½ கட்டு

கொத்தமல்லி          – ½ கட்டு

கேசரிப்பவுடர்         – தேவையான அளவு

உப்பு                 – தேவையான அளவு

 

 

அரைக்க தேவையான பொருட்கள் :

 

இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 1 கரண்டி

பட்டை              – 5

லவங்கம்            – 5

ஏலக்காய்            – 5

மிளகாய்த்தூள்       – சிறிதளவு

மல்லித்தூள்         – சிறிதளவு

 

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்

 

செய்முறை விளக்கம் :

 

  1. ஆட்டுக்கறியை துண்டுகளாக வெட்டி கழிவி சுத்தம் செய்யவும். அரைக்க தேவையான பொருட்கள் இஞ்சி, பூண்டு பேஸ்ட், பட்டை, லவங்கம், ஏலக்காய், மிளகாய்த் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

 

  1. ஒரு கடாயில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி நன்றாக காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு அத்துடன் இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பின்பு கறியை சேர்த்து நன்கு கிளறி அதனுடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும்.

 

  1. சிறிது நேரம் கழித்து அரைத்து வைத்த மசாலாப் பவுடரையும் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். கலவையுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறவும். பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிதளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.

 

  1. முக்கால் பாகம் கறி வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கிவிடவும். ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கலக்கி விடவும்.

 

  1. ஐந்து நிமிடங்கள் கழித்து நன்றாக கிளறி அரை வேக்காடு வெந்த பின் தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இப்படி செய்யும் போது அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும். கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி ரெடி.

Leave a Reply

Your email address will not be published.