முட்டை ஃப்ரைட் ரைஸ்

முட்டை ஃப்ரைட் ரைஸ்

 

 

 

தேவையான பொருட்கள்  :

 

பாஸ்மதி சாதம்      – 2 கப்

பச்சை பட்டாணி     – ¼ கப்

முட்டைகோஸ்      – ½ கப்

வெங்காயம்          – 1

கேரட்               – 1

பீன்ஸ்               – 5

முட்டை             – 2

பச்சை மிளகாய்      – 2

மல்லி இலை        – சிறிதளவு

எண்ணெய்           – 3 கரண்டி

சோயா சாஸ்        – 1 கரண்டி

தக்காளி சாஸ்              -1 கரண்டி

மிளகுதூள்           – 1 கரண்டி

உப்பு                – 1 கரண்டி

 

செய்முறை விளக்கம்:

 

  1. பச்சை பட்டாணியை நன்றாக ஊற வைத்து வேக வைக்கவும். பிறகு வெங்காயம், கேரட், முட்டைகோஸ், பீன்ஸை சிறியதாகவும் நீளமாக வெட்டவும். மிளகாயை சிறியதாக வெட்டிவைக்கவும். முட்டையை தனியாக ஒரு கப்பில் அடித்து வைக்கவும்.

 

  1. ஃப்ரைட் ரைஸ் செய்ய தேவையானவற்றை தயார் நிலையில் வைக்கவும். ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் மற்றும் மிளகாயை போட்டு லேசாக வதக்கவும்.

 

  1. இதனுடன் கேரட், முட்டைகோஸ் மற்றும் பீன்ஸ் சேர்த்து பாதி வேகும் அளவு வதக்கிவிடவும். காய் வதங்கியதும் அதை ஒரு ஓரமாக கடாயில் ஒதுக்கிவிட்டு அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி அடிப்பிடிக்காமல் பிரட்டவும்.

 

  1. முட்டை வெந்தபின் அதை நன்றாக பிரட்டிவிட்டு, வேகவைத்த பச்சை பட்டாணி, நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும். பிறகு அதில் தக்காளிசாஸ், சோயா சாஸ், தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.

 

  1. இதில் உதிரியாக வேக வைத்திருக்கும் சாதத்தை போட்டு மிளகுதூள் தூவி பிரட்டி விட்டு இறக்கவும். சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் ரெடி.

 

Leave a Reply

Your email address will not be published.