தேங்காய் பால் சிக்கன் பிரியாணி

தேங்காய் பால் சிக்கன் பிரியாணி

 

 

தேவையான பொருட்கள் :

 

சீரக சம்பா அரிசி    – ½ கிலோ

கோழிக் கறி         – ½ கிலோ

பெரிய வெங்காயம்   – 6

கிராம்பு              – 4

ஏலக்காய்            – 3

முந்திரி             – 10

எலுமிச்சம் பழம்     – 1

பச்சை மிளகாய்      – 10

முழு பூண்டு         – 2

தயிர்                – 1 கப்

தேங்காய் பால்       – 1 கப்

புதினா               – 1 கட்டு

கொத்தமல்லி        – 1 கட்டு

இஞ்சி               – 1 துண்டு

நெய்                – 4 கரண்டி

எண்ணெய்           – 2 கரண்டி

கேசரி பவுடர்        – 1 தேக்கரண்டி

கசகசா              – 2 தேக்கரண்டி

பட்டை              – சிறிதளவு

உப்பு                – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. கோழிக் கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிரியாணி அரிசியைக் கழுவி ½ மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் பட்டை, கிராம்பு சேர்த்து, அரிசியை உதிரியாக வேக வைத்து வடித்து வைக்கவும். மீதம் இருக்கும் பட்டை, கிராம்பு, பூண்டு, இஞ்சியை அரைக்கவும். தனியாக பெரிய வெங்காயம், மிளகாய், முந்திரியை அரைக்கவும். பிறகு தனியாக கொத்தமல்லி இலை, புதினா, சேர்த்து அரைக்கவும்.

 

  1. பிரியாணி செய்வதற்க்கு ஏதுவான ஒரு பெரிய பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அரைத்த வெங்காய மசாலா, அரைத்த கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின், இதனுடன் தயிர், கழுவி சுத்தம் செய்த கோழிக்கறியை போட்டு, எழுமிச்சம் பழச் சாறு சேர்த்து வதக்கவும்.

 

  1. தேங்காய் பால், கேசரி பவுடர், உப்பு சேர்த்து கிளறி மூடவும். கோழிக்கறி வெந்து, மசாலா சுருண்டு வந்ததும், வடித்து வைத்துள்ள சாதம் சேர்த்து கிளறி, அரை மணி நேரம் மிதமான தீயில் வைத்து இறக்கினால் சுவையான தேங்காய் பால் சிக்கன் பிரியாணி தயார்.

Leave a Reply

Your email address will not be published.