முட்டை புலாவ்

muttai pulav

 

தேவையான பொருட்கள் :

 

பாசுமதி அரிசி       – 2 கப்

முட்டை             – 3

கிராம்பு              – 3

ஏலக்காய்            – 3

பட்டை              – 3

மஞ்சள் தூள்        – ¼ கரண்டி

கரம் மசாலா தூள்   – 1 கரண்டி

மிளகாய் தூள்       – 1 கரண்டி

நெய்                – 4 கரண்டி

தேங்காய் பால்       – 1 கப்

தக்காளிக் கூழ்       – ½ கப்

சின்ன வெங்காயம்   – ½ கப் (பொடித்தது)

புதினா               – ½ கப் (பொடித்தது)

கொத்தமல்லி தலை  – ½ கப் (பொடித்தது)

உ‌ப்பு                – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. பாசுமதி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு அரிசியில் உள்ள நீர் சுண்டும் வரை அரிசி உடையாமல் வதக்கவும்.

 

  1. இதனுடன் தேங்காய் பால் 1 கப், கொஞ்சம் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும். சாதம் உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.

 

  1. முட்டையை உடைத்து ஒரு குழியான பாத்திரத்தில் ஊற்றி உப்பு போட்டு லேசாக நுரை வரும்படி அடித்து வைக்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 

  1. இதனுடன் புதினா, கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். அதில் முட்டை ஊற்றி இடைவிடாது கிளறிவிட்டு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். இந்த முட்டைக் கலவையுடன் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.

 

 

Leave a Reply

Your email address will not be published.