அயில மீன்க்கறி

அயில மீன்க்கறி

 

 

தேவையான பொருட்கள் :

 

அயில மீன்          – ½ கிலோ

தேங்காய்ப் பால்      – 1 கப்

பச்சை மிளகாய்      – 5

தக்காளி             – 1

பெரிய வெங்காயம்   – 2 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள்        – ½ தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

மல்லித் தூள்        – 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

எண்ணெய்           – தேவையான அளவு

உ‌ப்பு                – தேவையான அளவு

 

தாளிக்க தேவையான பொருட்கள் :

 

தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம்   – 3 (நறுக்கியது)

கறிவேப்பிலை       – 2 கொத்து

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் அயில மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு தேங்காயை துருவி அரைத்து முதற்பால், இரண்டாம் பால் என்று தனித்தனியே எடுத்து வைக்கவும்.

 

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் என்று ஒவ்வொன்றாக வரிசையாக போட்டு வதக்கி விடவும். வதக்கியதில் மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கவும்.

 

  1. பின்னர் அதில் இரண்டாவது தேங்காய்பாலை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கொதி வரும்பொழுது மீனை சேர்க்கவும். மீன் சேர்த்து சிறிதுநேரம் மிதமான தீயில் கொதிக்கட்டும்.

 

  1. பிறகு இதனுடன் திக்கான முதல் தேங்காய்ப்பாலை சேர்க்கவும். குழம்பு ஒரு கொதி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும். உப்பு சரி பார்க்கவும். பின் தாளிப்பில் கொடுத்துள்ள கறிவேப்பிலை, வெங்காயத்தை இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் நன்கு பொன்னிறமாக வதக்கி சேர்க்கவும். சுவையான அயிலக்கறி ரெடி.

 

Leave a Reply

Your email address will not be published.