ஆட்டு கறி குழம்பு

சிக்கன் சாப்ஸ் குழம்பு

 

 

 

தேவையான பொருட்கள்:

 

ஆட்டு கறி              – ½ கிலோ

தேங்காய் மூடி         – 1

சின்ன வெங்காயம்     – 200 கிராம்

நாட்டுத் தக்காளி       – 2 கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

மிளகாய்த் தூள்        – 4 தேக்கரண்டி

மல்லித் தூள்           – 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள்           – ¼ தேக்கரண்டி

சோம்பு, பட்டை         – தேவையான அளவு

எண்ணெய்              – தேவையான அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. முதலில் கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை தாளித்து, கருவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுதயும் சேர்த்து வதக்கி, தக்காளி, ஆட்டுக்கறி, மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் மிளகாய்த் தூள் போட்டு எண்ணெய் சுண்டும் வரை வதக்கவும்.

 

  1. பச்சை வாசனை போனதும், சுடு தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஆட்டு கறியை நன்றாக வேக விடவும். நன்றாக வெந்ததும் கறிவேப்பிலையைத் தூவி மூடி இறக்கவும். இறக்கும் பொழுது குழம்பில் தேங்காய் கால் மூடி அரைத்து ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். இதனால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.