ஆட்டுக்கால் குழம்பு

chettinadu chicken

 

தேவையான பொருட்கள்:

 

ஆட்டுக்கால்            – 2

காய்ந்த மிளகாய்       – 6

கறிவேப்பிலை          – 5

மஞ்சள் தூள்           – ½ தேக்கரண்டி

மிளகு                  – ½ தேக்கரண்டி

கடுகு                   – ½ தேக்கரண்டி

சீரகம்                  – 1 தேக்கரண்டி

எண்ணெய்              – 1 தேக்கரண்டி

தனியா                         – 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு                 – 1 தேக்கரண்டி

புளி                    – 1 நெல்லிக்காயளவு,

உப்பு                   – தேவையான அளவு.

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் ஆட்டுக்காலை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் மிளகு, சீரகம், தனியா, கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

 

  1. ஒரு கிளாஸ் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி தனியே வைக்கவும். பிறகு ஒரு குக்கரில் ஆட்டுக்காலுடன் தேவையான அளவு உப்பு, 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மூடி விடவும். குக்கரில் பத்து விசில் வந்த்ததும் இறக்கவும்.

 

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கய்ந்த்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இதனுடன் அரைத்த விழுது, புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதித்ததும் வேக வைத்த ஆட்டுக்காலை சேர்த்து சிறிது நேரம் வரை கொதித்ததும் இறக்கவும். சுவையான ஆட்டுக்கால் குழம்பு தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.