ஆட்டுக்கால் பாயா

ஆட்டுக்கால் பாயா

 

 

தேவையான பொருட்கள்:

 

ஆட்டுக்கால்            – 8

பெரிய வெங்காயம்     – 2

முந்திரி பருப்பு         – 8

பச்சை மிளகாய்        – 2

தக்காளி                – 2 (பெரியது)

மல்லித்தலை           – சிறிதளவு

கறிவேப்பிலை          – சிறிதளவு

மஞ்சள் பொடி          – ¼ தேக்கரண்டி

கரம் மசாலா           – ¼ தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

மிளகுத்தூள்            – 1 தேக்கரண்டி

சீரகத்தூள்              – 1 தேக்கரண்டி

மல்லித்தூள்            – 3 தேக்கரண்டி

மைதா                 – 2 டேபிள் கரண்டி

தேங்காய் துருவல்      – 4 டேபிள் கரண்டி

எண்ணெய்              – 2 டேபிள் கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

 

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் ஆட்டுக்காலை வெட்டி நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த ஆட்டுக்காலை மைதாமாவு, சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு தக்காளி, வெங்காயம், மல்லித்தலையை பொடியாக நறுக்கி, தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து விழுதாக அம்மியில் அரைக்கவும்.

 

  1. ஊற வைத்த ஆட்டுக்காலை குக்கரில் போட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லித்தலை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்க்கவும். பிறகு ஆட்டுக் கால் மூழ்கும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

 

  1. நன்றாக கொதி வந்த பின் குக்கரை மூடி விடவும். குக்கரில் மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். ஆட்டுக்கால் இளங்காலாக இருந்தால் அரைமணி நேரமும் சிறிது வழுவாக இருந்தால் ஒரு மணி நேரமும் வேக வைக்கவும்.

 

  1. ஆட்டு கால் நன்றாக வெந்ததும் அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிதளவு வெங்காயம், கருவேப்பிலையை பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதை சால்னாவில் சேர்க்கவும். சுவையான ஆட்டுக்கால் பாயா தயார்.

Leave a Reply

Your email address will not be published.