இரத்த புற்று நோயை குணப்படுத்தலாம்.

blood cancer

ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் இரத்த புற்று நோயை குணப்படுத்தலாம் என்று பிரபல ஸ்டெம் செல் விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளருமான யுகியோ நாக்கமுரா தெரிவித்துள்ளார்.

இந்திய-ஜப்பான் கூட்டு முயற்சியில் இயங்கும் ” நிச்சிஇன் ” புத்துயிர் மருத்துவ மையம் சார்பில், சர்வதேச ஸ்டெம் செல் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய பிரபல ஸ்டெம் செல் விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளருமான யுகியோ நாக்கமுரா, ஜப்பான் விஞ்ஞானிகளின் ஸ்டெம் மூலம், ” அப்லஸ்ட்டிக் அனிமியா ” மற்றும் ”தலசிமியா” போன்ற இரத்தப் புற்று நோய்களுக்கு ஸ்டெம்செல் மூலம் குணப்படுத்தும் முறையை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், ”இந்திய-ஜப்பான் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியில் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டன.  தற்போதைய கண்டுபிடிப்பான, ”(இஈ34+) செல்ஸ்” மற்றும் ”போன்மாரோ” விலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம்செல் முறை இரத்த புற்று நோயாளிகளுக்கு நல்ல மாற்றாக அமையும்.  இந்த கண்டுபிடிப்பின் மிருக கொழுப்பு கலப்படம் ஏதும் இல்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published.