ஆட்டுக்குடல் குழம்பு  

boti

 

 

தேவையான பொருட்கள்:

 

சுத்தம் செய்த குடல்    – 1

ஏலம்                   – 1

லவங்கம்               – 2

சின்ன வெங்காயம்     – 4

பூண்டு                  – 4 பல்

தேங்காய் துருவல்      – ½ கப்

பெரிய வெங்காயம்     – ½ கப் ( பொடியாக நறுக்கியது )

தக்காளி                – 3 ( நறுக்கியது )

மிளகாய் தூள்          – ¾ தேக்கரண்டி

மல்லி தூள்            – ½ தேக்கரண்டி

சோம்பு,சீரக தூள்       – 1 தேக்கரண்டி

நல்லஎண்ணெய்        – 50 மி.லி

பட்டை                         – 2 துண்டு

இஞ்சி                  – சிறு துண்டு

சோம்பு                         – சிறிதளவு

புளி                    – 1 பெரிய எலுமிச்சை அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. முதலில் ஆட்டுக் குடலை 4 – 5 முறை தண்ணீரில் நன்றாக அலசவும். பிறகு மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் போட்டு அரைத்து தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.

 

  1. பிறகு அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சோம்பு, லவங்கம் மற்றும் ஏலம் போட்டு தாளிக்கவும். தொடர்ந்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

 

  1. தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய், மல்லி, சோம்பு மற்றும் சீரக பொடியை சேர்த்து வதக்கவும். இதனுடன் கரைத்த புளியை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து சுத்தம் செய்த குடலையும் சேர்க்கவும். தண்ணீர் அதிகம் கூடாது. குக்கரில் 11 விசில் வந்ததும் இறக்கவும். சுவையான குடல் குழம்பு தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.