இறால் எண்ணெய் குழம்பு

இறால் எண்ணெய் குழம்பு

 

தேவையான பொருட்கள்:

 

இறால்                         – ¼

தேங்காய்               – ½ மூடி,

தாளிக்கும் வடகம்      – ½ உருண்டை,

மிளகாய் பொடி                 – 2 தேக்கரண்டி

எண்ணெய்              – 6 தேக்கரண்டி

சோம்பு                         – 2 தேக்கரண்டி

மல்லி பொடி           – 3 தேக்கரண்டி

உப்பு                   – தேவையான அளவு,

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் இறாலை தோல் நீக்கி நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு மிக்ஸியில் தேங்காய், சோம்பு ஆகியவற்றை அரைக்கவும். பின் ஒரு கடாயில் ஆறு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் போட்டு பொறிக்கவும். இதுனுடன் சேர்த்து இறாலை போடவும்.

 

  1. பிறகு மிளகாய் பொடி, மல்லிப் பொடியை சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த தேங்காய், சோம்பு விழுதை சேர்த்து கடாயயை மூடி போட்டு வேகவிடவும். இறால் வெந்து எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் இறக்கி பரிமாறவும். சுவையான இறால் எண்ணெய் குழம்பு சாப்பிட தயார்.

Leave a Reply

Your email address will not be published.