இறால் குழம்பு  

இறால் தொ‌க்கு

 

 

தேவையான பொருட்கள்:

 

இறால்                         – ½ கிலோ

சின்ன வெங்காயம்     – 50 கிராம்

மல்லித்தூள்            – 1 மேசைக்கரண்டி

எண்ணெய்              – 3 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள்         – 2 மேசைக்கரண்டி

தேங்காய்த் துருவல்    – 3 மேசைக்கரண்டி

பூண்டு                  – 3 பல்

தக்காளி                       – 3

கறிவேப்பிலை         – 3 கொத்து

சீரகம்                  – ¼ தேக்கரண்டி

சோம்பு                         – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்           – 1 தேக்கரண்டி

உப்பு                   – 1 ½ மேசைக்கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. இறாலை சுத்தம் செய்ய ஒரு பாத்திரத்தில் ½ மேசைக்கரண்டி உப்பு சேர்த்து பிசறி 10 நிமிடம் வரை ஊற விடவும். பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்கவும். பிறகு மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகத்தை அரைக்கவும். வெங்காயத்தை இரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும். சோம்பை அம்மியில் நன்றாக தட்டிக்கொள்ளவும்.

 

  1. பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். ஒரு கடாயயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பை தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

 

  1. பிறகு இறாலை சேர்த்து நன்றாக வதக்கவும். இறால் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும். பிறகு புளி தண்ணீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிட்டு தேங்காய் பால் ஊற்றி மேலும் 5 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.

 

Leave a Reply

Your email address will not be published.