இறால் முருங்கைக்காய் குழம்பு

இறால் முருங்கைக்காய் குழம்பு

 

 

 

தேவையான பொருட்கள்:

 

இறால்                         – 1/2 கிலோ

சின்ன வெங்காயம்     – 100 கிராம்

பூண்டு                  – 10 பல்

தேங்காய் எண்ணெய்   – 50 மில்லி

கறிவேப்பிலை          – 1 கொத்து

மஞ்சள் பொடி          – சிறிதளவு

புளி                    – 1 எலுமிச்சை அளவு

இஞ்சி                  – சிறு துண்டு

முருங்கைகாய்                 – 1

பீர்க்கங்காய்            – 1

தக்காளி                – 2

சோம்பு, கடுகு          – ½ தேக்கரண்டி

சீரகம்                  – ½ தேக்கரண்டி

தேங்காய்               – 2 தேக்கரண்டி

மிளகாய்ப் பொடி       – 2 தேக்கரண்டி

மல்லிப் பொடி          – 2 தேக்கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. முதலில் இறாலை தோல் நீக்கி நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு மிக்ஸியில் ஐந்து வெங்காயம், தேங்காய், கால் தேக்கரண்டி சீரகம் போட்டு நைசாக அரைக்கவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி, முருங்கைக்காய், பீர்க்கங்காய், தக்காளி முதலானவற்றை நறுக்கவும்.

 

  1. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் மற்றும் சோம்பை போடவும். கடுகு வெடித்திவுடன் அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தொடர்ந்து அதில் முருங்கைக்காய், பீர்க்கங்காய், தக்காளி சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கவும்.

 

  1. நன்றாக வதங்கியதும் இறாலை சேர்த்து வதக்கவும். பிறகு, அதில் மிளாகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி போட்டு வதக்கவும். பின் கரைத்த புளியை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மற்றும் உப்பு சேர்த்து காய் வேகும் வரை நன்றாக கொதிக்கவிடவும்.

 

  1. சீராக அனலை வைக்கவும். காய் நன்றாக வெந்ததும் அதில் கறிவேப்பிலையை எண்ணெயில் பொறித்துப் போடவும். சுவையான இறால் முருங்கைக்காய் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published.