உப்புக் கண்டம் குழம்பு

உப்புக் கண்டம் குழம்பு

 

 

தேவையான பொருட்கள்:

 

உப்புக் கண்டம்         – 5 துண்டு

வெங்காயம்    – 2

தக்காளி        – 4

பூண்டு          – 5 பல்

துவரம் பருப்பு – 100 கிராம்

புளிச் சாறு     – 3 தேக்கரண்டி

சாம்பார் பொடி – 4 தேக்கரண்டி

சோம்பு                 – ½ தேக்கரண்டி

கடுகு           – ½ தேக்கரண்டி

கறிவேப்பிலை – தேவையான அளவு

எண்ணெய்      – தேவையான அளவு

உப்பு           – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. கறியை உப்புடன் பிசைந்து ஒரு மாதம் வெயிலில் காய வைத்து எடுத்து வைப்பதுதான் உப்புக் கண்டம்.

 

  1. முதலில் அம்மியில் உப்புக் கண்டத்தை தட்டிக்கொள்ளவும். அதை குக்கரில் போட்டு துவரம்பருப்பு, சாம்பார் பொடி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, தட்டிய பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வேக விடவும்.

 

  1. கலவை நன்றாக வெந்தவுடன் அதில் புளிச் சாறு ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு இறக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி மூடி வைக்கவும். சுவையான உப்புக் கண்டம் குழம்பு தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.