செட்டிநாடு எலும்பு குழம்பு  

இறால் தொ‌க்கு

 

 

தேவையான பொருட்கள்:

 

ஆட்டு எலும்பு          – ½ கிலோ

பச்சைமிளகாய்                 – 10

வரமிளகாய்            – 10

பட்டை                         – 4

முருங்கைக்காய்        – 2

பிரியாணி இலை       – 1

தூவரம் பருப்பு         – 100 கிராம்

கத்திரிக்காய்            – 150 கிராம்

பெரிய வெங்காயம்     – 100 கிராம்

உருளைக் கிழங்கு      – 150 கிராம்

சின்ன வெங்காயம்     – 100 கிராம்

தக்காளி                – ¼ கிலோ

மஞ்சள் தூள்           – 1 தேக்கரண்டி

சாம்பார் தூள்           – 2 தேக்கரண்டி

சீரகம்                  – 1 தேக்கரண்டி

மிளகு                  – 1 தேக்கரண்டி

சோம்பு                                                 – 1 தேக்கரண்டி

எண்ணெய்              – தேவையான அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்;-

 

  1. முதலில் ஆட்டு எலும்பை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு ஒரு குக்கரில் கழுவிய ஆட்டு எலும்புடன், தூவரம் பருப்பு, மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு, மற்றும் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

 

  1. பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதில் சீரகம், சோம்பு, பட்டை, பிரியாணி இலை, பச்சைமிளகாய் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும். தொடர்ந்து வெங்காயம், தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

 

  1. இதனுடன் கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக் கிழங்கு போட்டு வதக்கவும். பிறகு சாம்பார் தூள் தூவி வதக்கவும். காய்கறிகள் நன்றாக வதங்கியதும், வேகவைத்த ஆட்டு எலும்புக் கலவையை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு குழம்பை நன்றாக வேகவிடவும். கடைசியாக கொத்தமல்லி தலையை தூவி இறக்கவும்.

 

 

Leave a Reply

Your email address will not be published.