எலும்புக் குழம்பு

ஆந்திரா நல்லி எலும்பு கறி

 

 

தேவையான பொருட்கள்:

 

எலும்பு                         – ¼ கிலோ

தக்காளி                – 3

பச்சை மிளகாய்        – 2

சின்ன வெங்காயம்     – 10

மஞ்சள் பொடி          – 1 தேக்கரண்டி

துவரம் பருப்பு          – 2 டேபிள் கரண்டி

குழம்புப் பொடி                 – 1 ½ டேபிள் கரண்டி

சோம்பு, சீரகம்          – தேவையான அளவு

கறிவேப்பிலை          – தேவையான அளவு

எண்ணெய்              – தேவையான அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் எலும்பை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு ஓரு குக்கரில் கழுவிய எலும்பு, துவரம் பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய், குழம்புப் பொடி, சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள் பொடி ஆகியவற்றை போட்டு, தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேகவிடவும்.

 

  1. வெந்ததும் குக்கரை இறக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தேவையான அளவு உப்புடன் எலும்பையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான எலும்புக் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published.